Tamilவிளையாட்டு

சச்சினை சந்தித்து வாழ்த்து பெற்ற மீராபாய் சானு

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான  49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனையான மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனை என்கிற பெருமையையும் மீராபாய் சானு பெற்றுள்ளார்.

மீராபாய் சானு, கிரிக்கெட் ஜாம்பவான்  சச்சின் தெண்டுல்கரை நேற்று நேரில் சந்தித்து  வாழ்த்து பெற்றார்.

இந்த சந்திப்பு குறித்து மீராபாய் சானு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

இன்று காலையில் சச்சின் சாரை நான் சந்தித்தேன். ஊக்கமும், ஞானமும் நிறைந்த அவரின் வார்த்தைகள் என்றும் என்னுடன் நிறைந்திருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.