சங்கி என்பது கெட்டவார்த்தை இல்லை – ரஜினிகாந்த் விளக்கம்

சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

படப்பிடிப்பிற்காக ஆந்திர மாநிலம் கடப்பா செல்கிறேன். சங்கி என்பது கெட்டவார்த்தை இல்லை. சங்கி என்பது கெட்டவார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை.

அப்பா ஆன்மிகவாதி, எல்லா மதங்களையும் விரும்ப கூடியவர் என்றுதான் ஐஸ்வர்யா கூறினார். பட விளம்பரத்திற்காக எதுவும் இல்லை. லால் சலாம் படம் சூப்பரா வந்துருக்கு. படத்தில் மத நல்லிணக்கத்தை பற்றி சொல்லியிருக்கிறார்கள் என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema