பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள தெலுங்கு படம் கவச்சம். இந்த படத்தில் காஜல் அகர்வால், மெஹ்ரீன் பிர்சாடா இணைந்து நடித்துள்ளனர்.
மெஹ்ரீன் தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்தவர். கவச்சம் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு மெஹ்ரீன் வந்தால் நான் வர மாட்டேன் என்று காஜல் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
இதனால் தான் கவச்சம் இசை வெளியீட்டு விழாவுக்கு மெஹ்ரீன் வரவில்லை என்று கூறப்பட்டது. படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுவிட்டதாம். பாடல்களை படமாக்க படக்குழு துபாய்க்கு சென்றது. மெஹ்ரீனின் பகுதியை படமாக்கும் வரை நான் துபாய்க்கு வர மாட்டேன் என்று காஜல் அடம் பிடித்துள்ளார்.
மெஹ்ரீன் இந்தியா திரும்பிய பிறகே காஜல் துபாய்க்கு சென்றிருக்கிறார். தனக்கு படப்பிடிப்பு இருந்ததால் கவச்சம் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்று மெஹ்ரீன் சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் காஜலுடனான பிரச்சினையால் தான் அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது.
![AddThis Website Tools](https://cache.addthiscdn.com/icons/v3/thumbs/32x32/addthis.png)