Tamilசெய்திகள்

கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு சந்தை அங்கீகாரம் வழங்க நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்

இந்தியாவின் சீரம் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக மற்றொரு தடுப்பூசியாக கோவோவேக்சை தயாரித்து உள்ளது. இந்த தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் ஏற்கனவே அனுமதி வழங்கி உள்ளார்.

தற்போது சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்றின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், இந்த தடுப்பூசியின் விற்பனைக்கு அனுமதிக்குமாறு சீரம் நிறுவனம் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதைத் தொடர்ந்து மத்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் நிபுணர் குழு இது குறித்து பரிசீலனை நடத்தியது. இந்நிலையில், கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு சந்தை அங்கீகாரம் வழங்க நிபுணர் குழு பரிந்துரைத்து உள்ளதாக தகவல் வெளியானது. குறிப்பாக, கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ் போட்டுக்கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஒரு பன்னோக்கு பூஸ்டர் டோசாக இதை பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.