X

கோவை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு!

கோவை மாவட்ட, கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ளதாவது:

கோவை மாவட்டத்தில் நகராட்சிகளில் வார நாட்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்அனைத்து துணி, மால், நகைக்கடைகள் மற்றும் பூங்காக்கள் இயங்க தடை விதக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டும். உணவகங்கள் காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.