கோவை நகைக்கடை விவகாரம் – கொள்ளையனின் அடையாளத்தை உறுதி செய்த போலீசார்

கோவை நகைக்கடையில் 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கொள்ளையன் அடையாளத்தை உறுதி செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கொள்ளையனை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளதாக காவல் அதிகாரி தெரிவித்துள்ளனர். கொள்ளையடித்த நபர் மீது ஏற்கனவே 2 வழக்குகள் இருப்பது உறுதியாகியுள்ளறதாக தகவல் தெரியவந்துள்ளது.

மேலும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பொள்ளாச்சி ஆனைமலையை சேர்ந்தவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools