X

கோவை தொகுதியை திமுகவுக்கு விட்டுக்கொடுத்தது ஏன்? – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் விளக்கம்

தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வசம் இருந்த கோவை எம்.பி. தொகுதியில் இந்த முறை தி.மு.க. போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அதற்கு பதிலாக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுகிறது.

தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார் என்பதாலேயே கோவை தொகுதியை தி.மு.க.வுக்கு விட்டுக் கொடுத்தீர்களா? ஏன் இந்த மாற்றம்? என்று கேட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் அளித்த பதில் வருமாறு:-

நாங்கள் வெற்றி பெற்ற தொகுதி கோவை என்றால் தி.மு.க. வெற்றி பெற்ற திண்டுக்கல் தொகுதியை தான் எங்களுக்கு தந்தார்கள். இரு கட்சிகளும் உட்கார்ந்து பேசுகிற போது பரஸ்பர மாறுதல் என்பது இயற்கையாக நடக்க கூடியதுதான். தி.மு.க. கோவையில் கொஞ்சம் வலுவான வேட்பாளரை இந்த முறை நிறுத்த வேண்டும் என்று பல காரணங்களை சொன்னார்கள்.

அப்போது அண்ணாமலை கோவையில் போட்டியிடுவாரா? இல்லையா? என்பது உறுதியாக தெரியாது. ஒரு யூகம்தான். அந்த வகையில் அண்ணாமலை போட்டியிடலாம் என்று நினைத்து கோவையை தி.மு.க. கேட்டிருக்கலாம். எங்களுக்கு திண்டுக்கல் தொகுதியை தி.மு.க. கொடுத்த போது கூட அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திண்டுக்கல் தொகுதியை தி.மு.க. கொடுத்த போது கூட அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திண்டுக்கல் தொகுதியை தந்திருக்கிறோம். பலவீனமான தொகுதியை தரவில்லை என்றுதான் சொன்னார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.