Tamilசெய்திகள்

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டி

மக்கள் நீதி மய்யம் தலைமையிலான மக்களின் முதல் கூட்டணியில் ஏற்கனவே சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுக்கு தலா 40 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. மக்கள் நீதி மய்யத்துக்கு 154 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இதில் 70 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அறிவித்தார். இதையடுத்து மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட உள்ள 2-ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

அதில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். தி.நகர் தொகுதியில் பழ.கருப்பையாவும், மயிலாப்பூர் தொகுதியில் ஸ்ரீபிரியாவும் போட்டியிடுகின்றனர்.