கோவை சிறுமி கொலை வழக்கு – சந்தோஷ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடையில் 7 வயது சிறுமி, கடந்த மார்ச் மாதம் அவரது வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு, அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், கோவையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது.

விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷ்குமார் மீதான குற்றம் நிரூபணமானதால், அவர் குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அவருக்கான தண்டனை விவரம் இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறி உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news