X

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு – மேலும் 2 பேரை கைது செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள்

கோவையில் கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் ஒன்று வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த காரில் இருந்த ஜமேஷா முபின் (வயது 29) என்பவர் உயிரிந்தார். இந்த வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்டிருந்த பெரோஸ் கான், உமர் பாரூக், முகமது அசாருதீன், அப்சர் கான் மற்றும் பெரோஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் கோவையை சேர்ந்த சேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.