கோவையில் ரயில் விபத்து – நான்கு இளைஞர்கள் பலி

கோவையில் இருகூர் அருகே ராவுத்தர் பாலம் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை ரயில்வே பாலத்தில் சில உடல்கள் சிதறி கிடப்பதாக போத்தனூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போத்தனூர் காவல்துறையில் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் ரயில் மோதி 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் உயிரிழந்தவர்கள் 20 முதல் 22 வயது மதிக்கத்தக்கவர்களாக உள்ளதாகவும், அதனால் அவர்கள் 4 பேர்களும் கல்லூரி மாணவர்களாக இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. இவர்கள் ரயில் மோதி பலியானார்களாக அல்லது வேறு ஏதும் காரணமாக என போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மேலும் ரயில் மோதி இறந்த 4 இளைஞர்களின் உடலை மீட்ட போத்தனூர் போலீசார், உடல்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்,.

மேலும் இதுக்குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு காவல் துறையினர், நான்கு பேரும் எவ்வாறு உயிரிழந்தனர் என்பது குறித்தும் போலீசார் அருகில் உள்ளவர்களிடமும், சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news