கோவையில் தேசிய புலனாய்வு அமைப்புகள் சோதனை

தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுதல், பயங்கரவாத கருத்துக்களை பரப்புதல், பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடுவதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளது.

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவையில் இன்று காலை முதலே என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லாரிபேட்டை மற்றும் ஜிஎம் நகரில் உள்ள இரண்டு பேரின் வீடுகளில் இந்த சோதனை நடைபெறுகிறது. இதேபோல் நாகை மாவட்டம் நாகூரிலும் என்ஐஏ அதிகாரிகள் முகாமிட்டு, ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news