கோவில் கும்பாபிஷேகம் நடத்த விடாமல் தடுப்பு – மனமுடைந்த கிராம மக்கள் பாயாசத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை முயற்சி
தர்மபுரி அருகே வேப்பமரத்தூரில் கோவில் திருவிழா நடத்துவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
13 ஆண்டுகளுக்கு பிறகு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், கும்பாபிஷேகத்தை நடத்தவிடாமல் மர்ம நபர்கள் சிலர் தடுத்துள்ளனர். இதனால், மனமுடைந்த கிராம மக்கள் திருவிழாவில் செய்து வைத்திருந்த பாயாசத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 7 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மேலும், சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து அரசியல் கட்சியினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
சம்பவம் நடந்த வேப்பமத்தூர் கிராமத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.