Tamilசெய்திகள்

கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவி ஏற்றார்

கோவா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்லில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

இதையடுத்து கோவா பாஜக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரமோத் சாவந்த் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

ராஜ்பவனில் ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளையை சந்தித்த பிரமோத் சாவந்த், அமைச்சரவையில் இடம் பெறுவோர் பட்டியலை ஒப்படைத்தார்.

இதைத் தொடர்ந்து இன்று காலை 11 மணி அளவில் சியாமா பிரசாத் முகர்ஜி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் 2வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.

கோவா ஆளுநர் அவருக்கு பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

விஸ்வஜீத் ரானே, ரவி நாயக், நிலேஷ் கப்ரால், அடானாசியோ மான்செரேட் உள்ளிட்ட 8 பாஜக எம்எல்ஏக்கள், அமைச்சர்களாக பதவியேற்றனர்.

விழாவில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அரியானா முதலமைச்சர் எம்.எல்.கட்டார், கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களும் விழாவில் பங்கேற்றனர்.