X

கோலி – காம்பீர் மோதல் குறித்து சேவாக் கருத்து

சமீபத்தில், லக்னோவில் நடந்த ஐ.பி.எல். போட்டியின் முடிவில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சேர்ந்த விராட் கோலிக்கும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சேர்ந்த கவுதம் கம்பீருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இந்த மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மைதானத்தில் நடந்த சம்பவத்தை அங்கேயே மறந்து விட்டு நாகரீகமாக கைகுலுக்குவதை விடுத்து வீரர்கள் ஆட்டம் முடிந்த பிறகு மோதல் போக்கை கடைப்பிடித்த சம்பவம் ரசிகர்களை மட்டுமின்றி போட்டி அமைப்பாளர்களையும் அதிர்ச்சிக்கும், அதிருப்திக்கும் ஆளாக்கி இருக்கிறது.

இந்த நிலையில், மைதானத்தில் விராட் கோலி – கம்பீர் இடையேயான மோதல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்:-

விராட் கோலி – கம்பீர் இடையே களத்தில் நடந்த மோதல் சரியல்ல. தோற்றவர்கள் அமைதியாக தோல்வியை ஏற்றுக்கொண்டு வெளியேற வேண்டும். வெற்றி பெற்ற அணி கொண்டாட வேண்டும். ஏன் வார்த்தை போரில் ஈடுபட வேண்டும்?. இவர்கள் இருவரும் இந்தியாவின் அடையாளங்கள். இது போன்ற செயல்களால் இவர்களை பின் தொடரும் பல கோடி இளைஞர்கள், சிறார்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்.

என்று சேவாக் தெரிவித்துள்ளார்.