கோலி இளைஞர்களுக்கு உத்வேகம் கொடுக்கிறார் – ஹனுமா விஹாரி பாராட்டு

இந்திய டெஸ்ட் அணியின் இளம் பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடி தனது இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

வீரர்கள் அறையில் கேப்டன் விராட் கோலி எப்போதுமே இளைஞர்களுக்கு உத்வேகமாக இருப்பார் என்று ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.

ஹனுமா விஹாரி இதுகுறித்து கூறுகையில் ‘‘விளையாட்டு மைதானத்திலும் சரி, வெளியிலும் சரி, விராட் கோலி எப்போதுமே உதாரணமாக இருப்பார். வீரர்கள் அறையில் இளம் வீரர்களுக்கு உத்வேகமாக இருப்பார். அவரை நாம் முன்மாதிரியாகவும், பின் தொடரக் கூடிய நபராகவும் நாம் பார்க்கலாம்’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news