கோலி இண்டர்நேஷ்னல் சூப்பர் ஸ்டார் – நியூசிலாந்து வீரர் புகழ்ச்சி

உலகின் மிகப்பெரிய டி20 லீக் தொடராக கருதப்படும் ‘ஐபிஎல்’ தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்திய அணி கேப்டன் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி ஏழு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

இதனால் அவரது பார்ம் மற்றும் கேப்டன் பதவி குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் வேறு, சர்வதேச போட்டி வேறு. விராட் கோலி இன்டர்நேஷனல் சூப்பர் ஸ்டார் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெர்குசன் கூறுகையில் ‘‘விராட் கோலி இன்டர்நேஷனல் சூப்பர் ஸ்டார். அவர் இந்திய அணிக்காக விளையாடுவதை காட்டிலும் ஆர்சிபி-க்காக விளையாடுவதில் மிகப்பெரிய மாறுபாடு உள்ளது.

அவர் விரும்பியபடி டி20 லீக் தொடரில் வெற்றி கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், உலகக்கோப்பையில் அவர் மோசமாக விளையாடுவார் என்று சொல்ல முடியாது.

இது வேறுபட்ட போட்டி, வேறுபட்ட அணி, வேறுபட்ட விளையாட்டு. நியூசிலாந்து அணி அவர் மீது ஒரு பார்வை வைக்கும். அவர்கள் ரன்கள் குவித்துள்ளார். மிகவும் அபாயகரமான வீரராக திகழ்வார்’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news