கோலியுடன் மோதல் விவகாரம்! – ரோகித் சர்மாவின் திடீர் ட்வீட்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் இடையே பிளவு நிலவி வருவதாகவும், உலக கோப்பை போட்டி தோல்விக்கு பிறகு இந்த விரிசல் அதிகரித்து இருப்பதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தது.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுடன் மூன்று 20 ஓவர் ஆட்டம், 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. இதில் கலந்துக் கொள்வதற்கு முன்னர், விராட் கோலிக்கு செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பில் ரோகித் சர்மாவுடனான விரிசல் குறித்த கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த கோலி, ‘ரோகித் சர்மாவுக்கும் எனக்கும் இடையே மோதல் நிலவுவதாக பரவிவரும் தகவல் முற்றிலும் பொய்யான செய்தி. எங்கள் இருவருக்கும் இடையே மிகவும் நல்ல உறவு நிடிக்கிறது.

அதில் எந்தவித கருத்து மோதலும் நடைபெறவில்லை. எனக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அது எனது முகத்திலேயே தெரிந்துவிடும்’ என கூறியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் விரிசல் குறித்த சந்தேகம் எழுப்பும் வகையில், ரோகித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நான் அணிக்காக விளையாட வருவதில்லை. என் நாட்டுக்காக மட்டுமே’ என பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து நெட்டிசன்கள் மீண்டும் விரிசலாக இருக்குமோ? என்று சமூக வலைத்தளங்களில் விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர். இதற்கிடையே, ரோகித்தின் இந்த டுவிட்டிற்கு ரோகித், கோலியின் ரசிகர்கள் ஆதரவாகவும் எதிராகவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news