கோரக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க. புதிய வியூகங்களை வகுத்து வருகிறது. 300-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்ற அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

சட்டசபை தேர்தலுக்காக பிரமாண்ட யாத்திரைகளை நடத்த பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் லக்னோவில் நடந்தது. இதில் உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்தும், அதிக இடங்களைக் கைப்பற்றுவது எப்படி என்பது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார். மேலும் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools