கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.15 உயர்வு

தக்காளி விலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும ஜெட்வேகத்தில் உயர்ந்து 100-க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி உற்பத்தியில் பாதிப்பு, கனமழை காரணமாக காய்கறி வரத்து குறைவு ஆகிய இரண்டும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை காய்கறி சந்தைக்கு கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிராவில் இருந்து காய்கறிகள் வருகின்றன. மழை மற்றும் விவசாய இடங்களில் இருந்து காய்கறிகளை கொண்டுவர முடியாத நிலையால் கடந்த சில நாட்ளாக தக்காளி விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது.

வரத்தை பொறுத்து விலை ஏற்றம் இறக்கம் இருந்து வந்தது. வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு 1200 டன் தக்காளி வரும் என வியாபாரிகள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. நேற்று கிலோ 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 15 ரூபாய் அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சில்லறை விலையில் 120-க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இஞ்சி- 220 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம்- 150 ரூபாய்க்கும், பட்டாணி- 200 ரூபாய்க்கும், பூண்டு- 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று 550 டன் தக்காளி மட்டுமே வந்ததால், விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news