X

கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கடலூர் சென்ற மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை கோயம்பேட்டில் வேலைப்பார்த்த வியாபாரிகள், தொழிலாளர்கள், அங்கு பணியாற்றிய போலீஸ்காரர்கள் என பலருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதற்கிடையே கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட அதிகாரிகள் அவர்ககளை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கடலூர் திரும்பிய 600 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 7 பேரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று மேலும் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.