Tamilசினிமா

‘கோமாளி’ இயக்குநரின் ‘லவ் டுடே’ படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது

ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘லவ் டுடே’. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘லவ் டுடே’ படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களின கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘லவ் டுடே’ படத்தின் டிரைலர் வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த ப்ரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.