விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா’, ‘சீயான் 60’ ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன. இதில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோப்ரா’, நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் உள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் இன்னும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை.
இதற்கிடையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து ‘சீயான் 60’ படத்தில் நடிக்க ஆரம்பித்தார் விக்ரம். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 50% முடிவடைந்துவிட்டது.
இந்நிலையில் ஜூலையில் ‘சீயான் 60’ படத்தைத் தொடங்கி முடிக்க திட்டமிட்டுள்ளார் விக்ரம். ஒரே கட்டமாக ‘சீயான் 60’ படத்தை முடித்துவிட்டு, பின்பு ‘கோப்ரா’ படத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளார்.