கோடை விடுமுறை குறைகிறது – ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு
நேரடி வகுப்புகள் கடந்த ஆண்டு செப்டம்பர் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்குவது வழக்கம். அதனைத்தொடர்ந்து 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வும் பிற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும்.

நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால், பொதுத் தேர்வுகள் மற்றும் இறுதித் தேர்வுகள் மே மாதம் இறுதிவரை நடைபெறுகிறது.

அதன்படி, 12-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே மாதம் 5-ந்தேதி தொடங்கி 28-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.

அதேபோல், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9-ந்தேதி ஆரம்பித்து 31-ந்தேதி வரையும், 10-ம் வகுப்புக்கு மே மாதம் 6-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரையிலும் நடக்க இருக்கிறது.

இதுதவிர 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13-ந்தேதி கடைசி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான (2022-23) அனைத்து வகுப்புகளும் ஜூன் மாதம் 13-ந்தேதி தொடங்கும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24-ந்தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு பள்ளி கோடை விடுமுறை காலம் வெகுவாக குறைந்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools