கோடைக்காலத்தில் வழக்கறிஞர்கள் கருப்பு கவுன் அணிவதில் இருந்து விலக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு
கோடைகாலங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், மார்ச் முதல் ஜூலை மாதம் வரை வக்கீல்கள் கருப்பு ‘கவுன்’ அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் மெட்ராஸ் பார் அசோசியேசன் என்ற வக்கீல் சங்கம் ஐகோர்ட்டுக்கு கோரிக்கை கடிதம் வழங்கும்.
அந்த வகையில், அண்மையில், ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த மனுவை அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “கோடைகாலம் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு வருகிற ஜூன் 30-ந்தேதி வரை ‘கவுன்’ அணிவதில் இருந்து வக்கீல்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
அதேசமயம் கருப்பு ‘கோட்’ மற்றும் கழுத்தில் வெள்ளை நிற பட்டை அணிவது கட்டாயம்” என்று கூறியுள்ளார்.