சென்னை, டிசம்பர் 19, 2023: உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை மிகவும் கவர்ந்த அறிமுக சீசனைத் தொடர்ந்து, கோக் ஸ்டுடியோ தமிழின் இரண்டாவது பதிப்பை கோகோ கோலா பெருமையுடன் வழங்குகிறது.
இந்த சீசனில் திறமை வாய்ந்த 21கும் மேற்பட்ட கலைஞர்கள், என்றும் மறக்க முடியாத 9 சுவடுகளை பதிக்கின்றனர். ரசிகர்களை பரவசப்படுத்தி மனதை தொடும் நிகழ்வாக இது உருவாகும். சீசன் 1 ஐ மிகவும் வெற்றிகரமானதாக மாற்றிய சாராம்சத்தின் அடிப்படையில், கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2 – வயது, கலாச்சாரம், கொண்டாட்டம், நட்பு மற்றும் தோழமை, காதல் மற்றும் பேரார்வம் போன்ற அனைத்தும் தனது புதிய ட்யூன்கள் மற்றும் மெல்லிசையின் மூலம் ஒன்றாக இணைக்கப்பட்டு ரசிகர்களை ஈர்க்கிறார் இசைத் தயாரிப்பாளர் ஷான் ரோல்டன். கலைஞர்களின் மறக்க முடியாத பாடல்கள் அடுத்த சில மாதங்களில் 2024இல் கோக் ஸ்டுடியோ தமிழ் யூடியூப் சேனலில் வெளியாக உள்ளது.
Youtube Link: https://www.youtube.com/@cokestudiotamil
இதன் முதல் பாடலான“இது செம வைப்”, ஒரு அற்புதமான உணர்வாக மட்டுமின்றி, ஆற்றல் மிக்கதாக, வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலாக கலைஞர்களால்உருவாகிறது. கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2, பராம்பரிய கலச்சாரத்தின் எல்லையையும் தாண்டி, பார்வையாளர்கள் கண்டிராத உணர்வுகளின் உச்சிக்கே அழைத்துச் செல்கிறது.
பார்வையாளர்களை பரவசப்படுத்தி, அற்புதமான ஒரு இசைப்பயணத்திற்கு இந்த சீசன் அழைத்து செல்லும். இரண்டாவதுசீசனில் ஒவ்வொரு பாடலும் இந்தத் தலைமுறையின் துடிப்புடன் எதிரொலிக்கும் குறிப்பிட்ட உணர்வுகளை வலியுறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோகா-கோலா இந்தியா மற்றும் தென்மேற்கு ஆசியாவின்மார்க்கெட்டிங் துணைத்தலைவர் அர்னப் ராய் பேசுகையில், ” கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 1 , தமிழ் இசை கொண்டாட்டமாக, வெற்றிகரமான, மொழியின் அடையாளமாக திகழ்ந்தது. இரண்டாம் சீசனில், இளைஞர்களுக்கான பொருத்தமான கருப்பொருள்கள் பற்றிய பாடல்கள் உள்ளன, அதை பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறோம்,” என்றார்.
குருப் எம் இந்தியா, முதலீட்டு, வணிகம் மற்றும் பங்குதாரர், நிறுவன தலைவர் அஸ்வின் பத்மநாபன் பேசுகையில், “வரவிருக்கும் சீசனில், எங்கள் பார்வை வழக்கமான பொழுதுபோக்கு இசைக்கு அப்பால் நீண்டுள்ளது. மனதை துளைக்கும் இசை நிகழ்ச்சியாக, இசைப்பயணமாக உருவாக்க ஆர்வம் காட்டி வருகிறோம். அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட, மிகவும் அசாதாரண கலைஞர்களை தேர்வு செய்திருப்பதே இதற்கு சான்றாக உள்ளது. இளைஞர்களின் உணர்வுகளில் பிரதிபலிப்பதாக இவர்களது குரல் வளம் இருக்கும். புதுமை, பன்முகத்தன்மை மற்றும் எல்லையில்லா கற்பனைத் திறனைத் தழுவி, கோக் ஸ்டுடியோ தமிழின் இரண்டாவது பதிப்பின் மூலம் அறியப்படாத படைப்பாற்றல் பகுதிகளுக்குள் நுழைகிறோம். அங்கு கலைத்திறன், இசை மற்றும் கலாச்சார ஆய்வு ஆகியவற்றின் இணைப்பில் கோகா கோலாதொடர்ந்து வெற்றிபெற்று வருகிறது,” என்றார்.
கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2 பல்வேறு துறைகளில் நிபுணத்துவும் பெற்ற கலைஞர்கள் இடம் பெறுகின்றனர். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தயாரித்து வழங்குகிறார். புகழ்பெற்ற நடிகர் மற்றும் இயக்குனர் விஜய் சேதுபதி, நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார், அறிவு மற்றும் தி அம்பஸ்ஸா பேன்ட், நடிகை மற்றும் பாடகி ஆன்டிரியா ஜெராமியா, நடிகை மற்றும் பாடகி அதிதி ராவ் ஹைதாரி, இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன், இன்டி-பாப் கலைஞர் யஞ்சன், ஹிப் ஹாப்கலைஞர்அசல் கோலார், சர்வதேச யூடியூப் பிரபலம் வித்யா வாக்ஸ், பாடகி ராஜலட்சுமி, கர்னாடிக் மியூசிக் மேஸ்ட்ரோ சஞ்சய் சுப்ரமணியன், ராப் பாடகர் நாவ்ஸ்-47, இசையமைப்பாளர் ஜஸ்டின்பிரபாகரன், இன்னிசை பின்னணி பாடகர் சிதாரா கிருஷ்ணக்குமார், இசையின் உதய நட்சத்திரம் கபில் கபிலன், புகழ்பெற்ற பாடகர் அருண் ராஜா, மெல்லிசை பின்னணி பாடகர் ஆர்.கே ஆதித்யா, நடிகையும் பாடகியுமான சிவாங்கி கிருஷ்ணக்குமார், பதிவு கலைஞர் சத்யபிரகாஷ் தர்மர், உள்ளிட்ட கலைஞர்கள் இந்த கோக் ஸ்டுடியோ இரண்டாம் சீசனில் அசத்துகின்றனர். ஒவ்வொருவரும் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்துகின்றனர்.
கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2 இளைஞர்களுக்கான இசை அனுபவத்தை வரையறுக்கும் உணர்ச்சிகள் மற்றும் அதிர்வுகளின் இசைக் கொண்டாட்டத்தில் மூழ்க உங்களை அழைக்கிறது. இதை ஸ்பாட்டிபை, ஆப்பிள் மியூசிக், கானா, சாவ்ன், வின்க் மியூசிக் மற்றும் ஆடிபிள் ஓடிடி தளங்களில் தேடி பிடித்து மகிழுங்கள்.
About The Coca-Cola Company
Coca-Cola in India is one of the country’s leading beverage companies, offering a range of high-quality and refreshing beverage options to consumers. The company in line with its vision of ‘Beverages For Life’ offers a wide portfolio of products which includes hydration, sports, sparkling, coffee, tea, nutrition, juice and dairy based products. In India it’s beverage range includes Coca-Cola, Coca-Cola Zero Sugar, Diet Coke, Thums Up, Charged by Thums Up, Fanta, Limca, Sprite, Maaza, Minute Maid range of juices. The Company also offers hydration beverages including Limca Sportz, Smartwater, Kinley, Dasani and Bonaqua packaged drinking water and Kinley Club Soda. Premium products constitute Schweppes and Smartwater. In addition, it offers Costa Coffee range of tea and coffee. The Company is constantly transforming its portfolio, from reducing sugar in its drinks to bringing innovative new products to market.
The Company along with its owned bottling operations and franchise bottling partners has a strong network of close to 4 million retail outlets through which it refreshes millions of consumers across the country. It seeks to positively impact people’s lives, communities and the planet through water replenishment, packaging recycling, sustainable agriculture initiatives and carbon emission reductions across its value chain.
Globally together with its bottling partners, The Coca-Cola Company employs more than 700,000 people, helping to bring economic opportunity to local communities worldwide. Learn more at www.cocacolacompany.com and follow us on Twitter, Instagram, Facebook and LinkedIn.
Learn more at www.coca-colacompany.com and follow us on Twitter, Instagram, Facebook and LinkedIn.