X

கோகுல்ராஜ் கொலை வழக்கு – யுவராஜின் தண்டனையை ரத்து செய்ய கோரி தாய் கலெக்டரிடம் மனு

சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜூக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் ரத்தினம் நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில், கோகுல் ராஜ் கொலை வழக்கில் காவல்துறையினர் நியாயமான முறையில் விசாரணை நடத்தவில்லை.

யுவராஜூக்கு எதிராக வேண்டுமென்றே வழக்கு புனையப்பட்டதாக குற்றம்சாட்டி அவரது தாயார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மனு அளித்துள்ளனர்.