உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது மகன் சார்லஸ், பேரன் வில்லியம், கொள்ளுப்பேரன் ஜார்ஜுடன் இணைந்து சமைக்கும் புகைப்படங்களை பக்கிங்காம் அரண்மனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து அரச குடும்பத்தின் 4 தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகக் காட்சி அளிக்கும் இந்த புகைப்படங்கள் விற்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாய் முன்னாள் ராணுவ அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.