கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணியில் இருந்து சாம் பில்லிங்ஸ் விலகல்

2023-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை சேர்ந்த பிரபல வீரர் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2023-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் 10 அணிகள் விளையாடும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் சாம் பில்லிங்ஸ், 2023-ம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவரை கொல்கத்தா அணி ரூபாய் 2 கோடிக்கு ஏலம் எடுத்தது என்பதும், இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் 8 போட்டிகளில் 169 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தப் போவதாகவும் அதனால் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாகவும் சாம் பில்லிங்ஸ் அறிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools