திருச்சி பாலக்கரை மண்டல பாஜக செயலாளரான விஜயரகு நேற்று முன்தினம், காந்தி மார்க்கெட்டில் வெட்டி கொல்லப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமது பாபு என்ற மிட்டாய் பாபு மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று திருச்சி சென்று, விஜயரகுவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பாஜக சார்பில் விஜயரகுவின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியை, அவரது மனைவியிடம் வழங்கினார்.