கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 361 ஆக உயர்வு

சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. வவ்வால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் இந்த வைரஸ் பரவியது.

கட்டுவிரியன் பாம்புகளை சூப் வைத்தும், உணவாகவும் சீன மக்கள் சாப்பிட்டதால் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கும் பரவியது.

சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் தற்போது இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் 20-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. உலக சுகாதார நிறுவனமும் சீனாவின் கொரோனா வைரஸ் தாக்குதலை சர்வதேச சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 17,205 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 21,558 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் அவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 57 பேர் உயிரிழந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news