சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் உலக நாடுகளுக்குப் பரவியது. சீனாவையடுத்து இந்த வைரஸ் இத்தாலியில்தான் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. இதுவரை 463 பேர் உயிரை குடித்துள்ளது.
இதனால் பொது இடங்களில் கூட வேண்டாம் என்று அறிவித்த இத்தாலி அரசு, பொதுமக்கள் அதிக இடங்களில் கூடும் தேவாலயங்கள், திரையரங்குகள் போன்றவற்றை மூடியது.
இத்தாலியின் முன்னணி கால்பந்து தொடரான ‘செரி ஏ’ லீக்கின் ஆட்டங்கள் ரசிகர்கள் ஏதுமின்றி மூடிய மைதானத்திற்குள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் ஏப்ரல் 3-ந்தேதி வரை ‘செரி ஏ’ உள்பட எந்தவொரு விளையாட்டும் நடைபெறக் கூடாது என இத்தாலி அரசு அறிவித்துள்ளது.