Tamilசெய்திகள்

கொரோனா மரணங்களை மருத்துவ அலட்சியமாக கருத முடியாது – உச்ச நீதிமன்றம்

மருத்துவ அலட்சியப்போக்கால் கொரோனா 2-வது அலையில் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்கள் அனைத்துக்கும் இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உத்தரபிரதேசத்தை சேர்ந்த தீபக்ராஜ் சிங் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், கொரோனா 2-வது அலையின் அனைத்து மரணங்களும் மருத்துவ அலட்சியப் போக்கால் ஏற்பட்டதாக கருத முடியாது. 2-ஆவது அலையில் பாதிப்பு நாடு முழுவதும் இருந்தது என தெரிவித்தனர்.

கொரோனா முதல் அலையில் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருப்பது மனிதாபிமானத்தின் அடிப்படையிலேயே தவிர, மருத்துவ அலட்சியப்போக்கை காரணம் காட்டி அல்ல என்று தெளிவுபடுத்தினர். மேலும் மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து வழக்கை முடித்துவைத்தனர்.