X

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு நோபாளம் தடை

அண்டை நாடான நேபாளத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து நேபாளம் சென்ற 4 சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் நேபாளம் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா பாதித்த 4 இந்தியர்களையும் சொந்த நாடு திரும்பும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.