Tamilசெய்திகள்

கொரோனா பாதித்த மாநிலமாக உத்தர பிரதேசம் அறிவிப்பு!

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கொரோனா வைரசின் உருமாறிய வடிவமான ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவிய போதிலும் குறைவான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவித்தன.

ஒமைக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்க இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.

இதற்கிடையே, இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், ஒமைக்ரான் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேசம் கொரோனா பாதித்த மாநிலம் என அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக, அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், இந்த அறிவிப்பு வரும் 2022-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.