ஒடிசா மாநிலத்தில் நேற்று மேலும் 8,612 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை ஆறு வயது சிறுமி உள்பட 19 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தனர். இந்நிலையில் பரிசோதனையின் முடிவில் கொரோனா உறுதி செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் ஒருவாரத்திற்கு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அம்மாநில அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மருத்துவ சான்றிதழ் சமர்ப்பித்தால் விடுமுறை காலத்தை மேலும் நீட்டிக்க முடியும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக, அரசு ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் 14 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.