X

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 53,720 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 11,109 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,753 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 3,059, மகாராஷ்டிராவில் 1,152, டெல்லியில் 1,420 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 48 லட்சத்து 8 ஆயிரத்து 22 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 6,628 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 42 லட்சத்து 23 ஆயிரத்து 211 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 53,720 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றை விட 4,098 அதிகமாகும்.

கொரோனா பாதிப்பால் நேற்று டெல்லியில் 6 பேர், மகாராஷ்டிராவில் 4 பேர், ராஜஸ்தானில் 3 பேர் உள்பட 21 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட 6 மரணங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 91 ஆக உயர்ந்துள்ளது.