Tamilசெய்திகள்

கொரோனா பரவல் அதிகரிப்பு – சிட்னியில் தொடரும் ஊரடங்கு

ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னியில் கடந்த வியாழக்கிழமை 642 பேருக்கும், வெள்ளிக்கிழமை 681 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், சிட்னியில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அந்நகரில் அமலில் உள்ள ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு செப்டம்பர் மாத இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக சிட்னி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிட்னியில் கடந்த ஜனவரி மாதம் முதல் அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிட்னியின் முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சுமார் 20 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.