கொரோனாவை தடுக்க உருவாக்கப்பட்டுள்ள கோவாக்சின் என்ற மருந்தை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி செயல்பாட்டிற்கு கொண்டு வர இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதையடுத்து அந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க தமிழகத்தின் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விசாகப்பட்டினம், ரோஹ்டாக், டெல்லி, பாட்னா, பெல்காம், நாக்பூர், கொரோக்பூர், ஹைதராபாத், ஆர்யா நகர், கான்பூர் மற்றும் கோவா உட்பட நாடு முழுவதும் சுமார் 12 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
டெல்லி மற்றும் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ‘கோவாக்சின்’ பரிசோதனை தொடங்கிவிட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று கோவாக்சின் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் சோதனை இன்று தொடங்கியது. சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் மருந்து பரிசோதனை தொடங்கியது.
ஆரோக்கியமான நிலையில் உள்ள தன்னார்வலர்கள் 10 பேரில் இரண்டு பேருக்கு 0.5 என்ற அளவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.