தமிழகத்தில் நேற்று 35,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,34,804 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் நேற்று மேலும் 6,073 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார்.
மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று பகல் 12 மணிக்கு காணொலி மூலம் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்துகிறார்.