Tamilசெய்திகள்

கொரோனாவை எதிர்கொள்ள பாரம்பரிய மருந்துகளை பயன்படுத்தும் வட கொரியா

வடகொரியாவில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் 2.19 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போதிய கொரோனா பரிசோதனை வசதிகள் இல்லாததால், அந்த நோயைப் போன்ற ‘காய்ச்சலால்’ பாதிக்கப்பட்டவா்கள் என்று மட்டுமே  அதிகாரிகள் புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகின்றனா்.

மேலும் போதுமான மருத்துவ கட்டமைப்பு இல்லாமை, மருந்து மாத்திரைகள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு திணறி வருகிறது.

இந்நிலையில் கொரோனாவை எதிர்கொள்ள இஞ்சி, மூலிகை தேநீா் போன்ற பாரம்பரிய மருந்துகளை மக்கள் பருக வேண்டும் என அந்த  நாட்டு அரசு ஊடகம் பொதுமக்களிடம் பரிந்துரைத்து வருகிறது.

உலக நாடுகள் சில வடகொரியாவுக்கு உதவுவதாக கூறினாலும், வெளிநாடுகளின் மருத்துவ உதவியை ஏற்க மறுத்துவரும் வட கொரிய  அரசு கொரோனாவை எதிர்கொள்ள தற்போது பாரம்பரிய மருந்துகளை பரிந்துரைத்து வருகிறது.