தமிழில் இந்தியன் மற்றும் இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் நடித்து இருப்பவர் நடிகை ஊர்மிளா மடோன்கர். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன்பிறகு அந்த கட்சியில் இருந்து விலகி, சிவசேனாவில் இணைந்தார்.
இந்தநிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட தகவலில், “எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் நலமாக உள்ளேன். வீட்டில் என்னை தனிமைப்படுத்தி கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.