கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதி – தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உச்சநீதிமன்ற உத்தரவுபடி  தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த நிவாரணம் வழங்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools