கேரளாவில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களில், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மாதம் 5000 ரூபாய் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்குவது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் நபர்கள், சமூக நலன், நல நிதி அல்லது பிற ஓய்வூதியங்கள் பெற்றிருந்தாலும் இந்த நிதி உதவி பெற தகுதி உடையவர்கள்.
மாநிலத்திற்குள் அல்லது வெளியில் அல்லது வெளிநாட்டில் இறந்தாலும், அவர்கள் மாநிலத்தில் குடியேறியவர்களாக இருந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.