கொரட்டூரில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழா – அமைச்சர் பி.கே.சேகர் பாபு பங்கேற்பு

கருணாநிதி நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு அம்பத்தூர் வடக்கு பகுதி தி. மு.க. சார்பில் “திருநாட்டின் அரும் தலைவர், “திசை மாற்றிய திரைக் கலைஞர்” என்ற தலைப்பில் வாழ்த்தரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ் தலைமையில் கொரட்டூரில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் பிரியா, திரைப்பட இயக்குனர் மிஸ்கின், நடிகர் அஜய் ரத்தினம், நடிகை கோவை சரளா, பேராசிரியர் ஜெயவர்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருணாநிதியின் திரையுலக பணிகள் குறித்து பேசினர். இதில் ஜோசப் சாமூவேல் எம். எல் ஏ., மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, தெற்கு பகுதி செயலாளர் டி.எஸ்.பி.ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news