கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

`மாற்றான்’ படத்திற்கு பிறகு சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் த்ரில்லர் படத்திற்கு `காப்பான்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

முன்னதாக காப்பான், மீட்பான், உயிர்கா உள்ளிட்ட மூன்று தலைப்புகளை தேர்வு செய்து வைத்திருந்த படக்குழு, எந்த தலைப்பை வைக்கலாம் என்று ரசிகர்களிடம் கருத்து கேட்டிருந்தது. இந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 12.10 மணிக்கு படத்திற்கு காப்பான் என்று தலைப்பு வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் முதல்பார்வை போஸ்டரையும் வெளியிட்டது.

இதில் சூர்யா, கோர்ட், சூட்டுடன் கையில் துப்பாக்கி வைத்தபடி தோற்றமளிக்கிறார். மற்றொரு போஸ்டரில், சூர்யா, மோகன் லால், ஆர்யா இடம்பெற்றுள்ளனர்.

மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்து வருகிறார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

70 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி 17-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. அதற்குள் என்ஜிகே படப்பிடிப்பை முடித்துவிட்டு சூர்யா விரைவில் காப்பான் படக்குழுவில் இணையவிருக்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools