2019-ஆம் ஆண்டு மதுமிதா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கே.டி என்கிற கருப்புதுரை’. மு.ராமசாமி , நாக விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்து பல விருதுகளையும் வென்றது.
மேலும் இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நாக விஷாலுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் ‘கே.டி என்கிற கருப்புதுரை’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மு.ராமசாமி நடித்த கதாபாத்திரத்தில் அபிஷேக் பச்சன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தை நிகில் அத்வானி தயாரிப்பதாகவும் தமிழில் இயக்கிய மதுமிதாவே இந்தியிலும் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் திரைக்கதையில் மதுமிதா தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.