X

கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் நடிக்கும் பிக் பாஸ் பிரபலங்கள்

மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளாராம்.

மேலும் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இதில் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்க உள்ளனர். இவர்கள் இருவரும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் ஆவர். இப்படத்திற்கு ‘கூகுள் குட்டப்பன்’ என பெயர் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகை லாஸ்லியா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவரும் இப்படத்தின் நாயகன் தர்ஷனும் பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.