X

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் – பதக்கப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 19ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கியது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நாடுகளில் வருகிற 31-ந் தேதி வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி நடைபெறுகிறது.

இந்த விளையாட்டு திருவிழாவில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஆக்கி, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பேட்மின்டன், மல்யுத்தம், பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், கூடைப் பந்து, நீச்சல், வாள்வீச்சு, குத்துச்சண்டை, ஸ்குவாஷ் உள்ளிட்ட 26 போட்டிகள் இடம் பெற்றுள்ளன.

18 வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், இதுவரை நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் 6 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன், பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Tags: tamil sports