Tamilசெய்திகள்

கேரள வாலிபருக்கு ஒமைக்காரன் பாதிப்பு!

உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் தொற்று கடந்த 24-ந்தேதி தென்ஆப்பிரிக்கா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஒமைக்ரான் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் கடந்த 2-ந் தேதி கர்நாடக மாநிலத்தில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த ஒருவருக்கும், பெங்களூரு டாக்டர் ஒருவருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 6-ந்தேதி இங்கிலாந்தில் இருந்து கொச்சி விமான நிலையம் வந்த எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பரிசோதனை செய்யப்பட்டது.

அவரிடம் இருந்து ரத்த மாதிரி எடுக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ்காந்தி உயிரி தொழில் நுட்ப மையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பட்டது.

இதில் அவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது மனைவிக்கும், தாயாருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் பாதிப்பு உறுதியானது. அவர்கள் 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுடன் தொடர்பில் இருந்த மற்றவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் வாலிபருடன் இங்கிலாந்தில் இருந்து கொச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த 149 விமான பயணிகளுக்கும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கேரள சுகாதாரதுறை மந்திரி வீணாஜார்ஜ் கூறுகையில், லண்டனில் இருந்து கொச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த 149 பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.